எதிர்மறைகள் என்னுடைய வாழ்வில் எப்போதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதனை எப்படி சரி செய்வது?”
“என் மனதில் நிம்மதியே இல்லை. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்”
என்று கேள்வி கேட்பவர்களை நான் பார்க்காத நாட்களே இருக்க முடியாது. வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில், ஏதாவது ஒரு விதத்தில், கஷ்டத்தை அனுபவித்த(ப்ப)வர்களாகவே அவர்கள் இருப்பார்கள். அவர்கள் மனதில் இருப்பது எல்லாம் இந்த கஷ்டங்களிலிருந்து எப்படியாவது தப்பி ஓடி விட வேண்டும். அவ்வளவுதான்.
எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. உர்சுலா லே கின் என்ற எழுத்தாளர் எழுதிய “எ விசர்ட் ஒஃப் எர்த்சீ (A Wizard of Earthsea)” என்கிற கதைப்புத்தகத்தில் அந்த கதையின் நாயகன் ஜெட் என்பவன் ஒரு மந்திரவாதியிடம் உதவியாளனாக வேலை செய்து கொண்டிருப்பான். ஒரு கட்டத்தில் தான் கற்றுக் கொண்ட சிறிய சிறிய மந்திரங்களிலிருந்து ஒரு பெரும் பூதத்தை வரவழைத்து விடுவான். அது அவனை கதை முழுக்கு பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனிடம் அடைய விரும்பும். அவன் வயது ஏற ஏற, அவனது மந்திர சக்திகள் கூட கூட அந்த பூதத்தின் வலிமையும் உருவமும் பெரிதாகிக் கொண்டே இருக்கும். வருடக்கணக்காக அந்த பயங்கர பூதத்திடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் அவன் ஒரு கட்டத்தில் ஒரு பெரும் உண்மையை உணர்வான். அதாவது இனி ஓடி ஒளிந்து பிரயோஜனம் இல்லை, அதை நேரிடுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வருவான். அந்த தருணத்தில் அவனது அகத்தில் ஒரு ஒளிக்கீற்று தெரியும். அந்த பூதத்திற்கும் அவனுக்கும் உள்ள அந்த பந்தமானது அவனது தெரிவே என்பது அவனுக்கு விளங்கும். அவனது பொறுப்பில் இருக்கும் அந்த விஷயத்தை, அவனது இந்த தருணத்தின் தெரிவுகளால் மாற்ற முடியும் என்பதை அவன் உணர்கிறான்.
மேலும் எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே காண்போம்
இனி அது ஓட்டப்பிடித்தம் அல்ல. அந்த தருணம் முதல் அவன் வேட்டையாடப்படவும் இல்லை வேட்டையாடவும் இல்லை, இப்போது….. அவனுக்கு எல்லாமே புரிகிறது, அந்த புரிதல் சிறிது ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், அவனது வேலை ஏற்கனவே தான் செய்த தவறை திருத்திக் கொள்வது அல்ல ஆனால் தவறினால் தொடங்கிய ஒன்றை தீர்த்து முடிப்பதே என்பதை அவன் உணர்கிறான். இருளின் அமைதியில் மனிதனும் நிழலுருவமும் நேரெதிரில் சந்திக்கிறார்கள். நிசப்தம். மிக சத்தமாகவும் தெளிவாகவும் அந்த நிசப்தத்தை குலைக்கும் விதமாக, ஜெட் அந்த பூதத்தின் பேரை உச்சரிக்கிறான் அதே தருணத்தில் அந்த வாயில்லா நாக்கில்லா பூதமும் நிலைகுலையும் சப்தத்தில் அதே பேரை உச்சரிக்கிறது : ஜெட். இரண்டும் ஒரே குரலாக இருப்பதில் ஆச்சர்யம் இருக்கிறதா என்ன?
எவ்வளவு அழகாக ஒருவரது வாழ்வில் உருவாகும் தீமைகள் எனும் பூதங்கள் தாமல்லாது வேறில்லை, தம்மால் உருவாகாது வேறில்லை என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். நாம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. நாம் நம்மால் உருவாக்கப்பட்ட நமது பூதங்களை நேரிட வேண்டும். அது பல நேரங்களிலும் நம்மால் பெரிதும் பூதாகரமாக ஆக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதை நேரிடும் போது, அதன் தன்மை உணரப்பட்டு தானாகவே அழிக்கப்படுகிறது. அல்லது குறைந்தப்பட்சம் அதனைக் குறித்து இருக்கும் பெரும் பயமாவது அகற்றப்படுகிறது.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!